அடக்கடவுளே...சில நொடிகளில் எக்ஸ்லேட்டரில் சிக்கிக் கொண்ட சிறுவனின் தலை! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!



boy-stuck-escalator-wall-china

சீனாவின் சோங்சிங் நகரில் ஜூலை 16ம் தேதி, ஒரு சிறுவன் எஸ்கலேட்டரில் பயணிக்கும் போது தன்னுடைய தலையை சுவருக்கும் கதவுக்கும் இடையே நுழைத்து சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடுமையான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிர்ச்சியூட்டும் சம்பவம்

சிறுவன் தனது ஆர்வத்தால், எஸ்கலேட்டர் சுவரில் தலையை நுழைத்துள்ளார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அருகிலிருந்த சில பொது மக்கள் உடனடியாக எஸ்கலேட்டரை நிறுத்தியதால், பெரிய விபத்தை தவிர்க்க முடிந்தது.

தலை சிக்கிய சிறுவன், எஸ்கலேட்டர் நின்றபின்பும் தன்னுடைய தலையை வெளியே எடுக்க மிகவும் சிரமப்பட்டார். ஆனால் அருகிலிருந்த மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, சிறுவனை பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்டனர். அதன்பிறகு, சிறுவனை பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. சிறு கணங்களில் நடந்த விபத்து, சாமான்யத்தின் அதிர்ஷ்டத்தால் பெரும் ஆபத்து இல்லாமல் முடிந்தது.

இதையும் படிங்க: இப்படி கூட வேடம் அணிந்து வருவாங்களா! பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுமிகள்! திடீரென கேட்ட அலறல் சத்தம்! சில நொடியில் அந்த சிறுமிகளிடம்... பதறவைக்கும் சம்பவம்!

வீடியோ வைரல் 

இந்த விபத்துக்குள்ளான தருணம் பதிவு செய்யப்பட்ட வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில்,"The explorer's childhood. Hope he will be smarter in the future." என்ற பதிவுடன் பதிவாகியுள்ளது. சிலர் கவலையுடன் பகிர்ந்தாலும், சிலர் நகைச்சுவையாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி...

 

 

இதையும் படிங்க: Video : வெள்ளநீர் தேங்கிய குளம்! வித்தியாசமான மஞ்சள் கலரில்! குதித்து விளையாடி, கூவிக் குரலில் ஒரே சத்தம்! பக்கத்தில் சென்று பார்த்து ஷாக்கான மக்கள்! வைரலாகும் வீடியோ....