தமிழகம்

மனைவியை கொலை செய்துவிட்டு குளியலறை வழியாக ஏறி குதித்து கணவன் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

husband killed his wife


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்கும் சுகன்யா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட  கருத்துவேறுபாடு காரணமாக சுகன்யா தனது கணவரை பிரிந்து திருப்பூரில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் திருப்பூர் பனப்பாளையத்திலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் முகம் சிதைக்கப்பட்டு, ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்துகிடந்த பெண் சுகன்யா என்பது தெரியவந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 31ஆம் தேதி இமானுவேல் மனைவியை சந்தித்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு இருச்சக்கரவாகனத்தில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொலை செய்து முகத்தை கல்லால் சிதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இமானுவேல் தங்கிருந்த வீடு வெளிப்பக்கமாக பூட்டு போடப்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement