தமிழகம்

10 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த கணவன்!. காதல் மனைவியை இப்படியா செய்வது!.

Summary:

husband killed his wife

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துபாயில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள சேக் ஒருவரின் வீட்டில் வேலைபார்த்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணுடன் பழகிவந்துள்ளார்.

இருவரும் காதலித்து, 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தகொண்டனர். இருவருக்கும் பிறந்த பெண் குழந்தை பிறந்தது. தனது மகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முனியசாமி மீண்டும் துபாய்க்கு கிளம்பியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய முனியசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு இவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையின் போது, மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு முனியசாமி தப்பி ஓடியுள்ளார்.

                                          

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மும்தாஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முனியசாமி மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement