"துருவ நட்சத்திரம் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமா?! குழப்பத்தில் ரசிகர்கள்..
மனைவியின் அந்த ரகசியத்தை தெரிந்துகொண்ட கணவன்.! துடிதுடிக்க இருமகள்களுடன் எடுத்த விபரீத முடிவு!!
மனைவியின் அந்த ரகசியத்தை தெரிந்துகொண்ட கணவன்.! துடிதுடிக்க இருமகள்களுடன் எடுத்த விபரீத முடிவு!!

மதுரையில் வசித்து வந்தவர் கருப்பையா.இவர் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று டீக்கடையில் சிலிண்டர் வெடித்து கருப்பையா மற்றும் அவரது மகள்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கருப்பையாவின் மனைவி கீதாவிற்கு அதே பகுதியில் வசித்து வந்த ஆனந்த் என்ற இளைஞருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பையாவிற்கு தெரியவந்த நிலையில் மனமுடைந்த அவர் இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். மேலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து கீதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கருப்பையா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் தனது இருமகள்களையும் விட்டுவிட்டு சென்றால் கீதாவிடம் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என எண்ணிய அவர் கடையில் இருந்த கேஸ் சிலிந்தர்களை திறந்து வைத்து விட்டு, தீயை பற்ற வைத்து அதனை வெடிக்க செய்துள்ளார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.