தமிழகம்

இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் மனைவி.! எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வால் பரிதாபமாக உயிரிழந்த தம்பதி.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கென்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் என்ப

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கென்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் மழையூரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் நேற்று முன் தினம் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார்
 
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு மனைவியுடன் தூங்க சென்றார் சம்சுதீன். அப்போது வெளிச்சத்திற்காக அருகில் மண்எண்ணை விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது கைபட்டதில் எதிர்பாராத விதமாக விளக்கு சரிந்து விழுந்து அதி லிருந்த கொட்டிய மண்எண்ணையால் சம்சுதீனின் மனைவி ரெஜினாபேகம் உடையில் தீப்பிடித்து எரிந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர் திடீரென சூடு தாங்கமுடியாமல் எழுந்து அலறினார். அவரை காப்பாற்ற போராடிய சம்சுதீனின் உடலிலும் தீ பரவியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement