தமிழகம்

நள்ளிரவில் காதல் மனைவி செய்த காரியம்! துடிதுடித்துபோய் கணவன் எடுத்த விபரீத முடிவு!

Summary:

Husband and wife commits suicide in panruthi

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர்  மணிகண்டன்.  இவர், கோவில் கோபுரத்தில்  வர்ணம் தீட்டும் பணி செய்து வந்துள்ளார். மணிகண்டன் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் 
இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் திருவதிகையில் தனி வீட்டில் வசித்து வந்தனர்.மேலும் தற்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

 இந்நிலையில் மணிகண்டன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் எப்பொழுதும் வீட்டிற்கு குடித்துவிட்டே வந்துள்ளார். ஆனால் கணவரின் இந்த செயல், மகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல  மணிகண்டன் சமீபத்தில் குடித்துவிட்டு வந்து மகேஷ்வரியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்நிலையில்
போதை தெளிந்து  கண்விழித்து பார்த்த மணிகண்டன் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதுள்ளார். பின்னர் மனைவியை கீழே இறக்கிவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே மறுநாள் காலை நீண்ட நேரமாகியும்  கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். பின்னர் அவரது உடல்களை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement