அடக்கொடுமையே! விபத்தில் பலியான சுகாதாரத்துறை ஊழியர்.. மீட்க வந்த ஆம்புலன்ஸ் உரிமையாளரும் பலியான துயர சம்பவம்..!
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் தெய்வநாயகம். இவர் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தெய்வநாயகம் தனது இருசக்கர வாகனத்தில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே சென்ற போது விபத்தில் சிக்கி பலியானார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் தெய்வநாயகத்தின் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது மற்றொரு கனரக வாகனம் மோதியதில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான ஜெயசீலன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
-ahpar.jpeg)
இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து நடந்த இரு வாகன விபத்துகளில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.