சிம்புவின் அரசன் படத்தில், "ராஜன் வகையறா"- வெற்றிமாறன் ஏமாற்றமாட்டார்... ரசிகர்கள் சுவாரசியம்.!
ஓட்டு போட ஊருக்கு போனவர்களுக்கு பேரதிர்ச்சி... ஸ்தம்பிக்கும் சாலை.!
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்து வரும் பலர், வாக்களிப்பதற்காக முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பலர் வாக்களிக்க முடியாமல் போனதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது. இந்த நிலையில், தேர்தல் முடிந்து விடுமுறை முடிவடைந்ததால், மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் முதல் பெருங்களத்தூர் வரை நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று வருகின்றன. மேலும், வெயில் கடுமையாக வாட்டி வதைக்கின்ற நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!
போலீசார் போக்குவரத்தை சீர்செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டால், இந்த நெரிசல் நாளை காலை வரை நீடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!