சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
செல்போனில் பிரச்சாரம்.! வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி.? உயர்நீதிமன்றம் கேள்வி.!
வாக்காளர்களின் அலைபேசி எங்களை சட்டவிரோதமாக பெற்று அரசியல் கட்சி பிரசாரம் செய்வதாக எழுந்த புகாரில், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரியில், பா.ஜ. கட்சி சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும் எனவும், வாக்காளர் பட்டியலில் செல்போன் எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள் குறுந்தகவல்கள் மூலமாக வாட்ஸ்-அப் குழுவில் இணைய கோரி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், ஆதார் விவரங்களை பெற்று அரசியல் கட்சி பிரசாரம் செய்வது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு கடுமையான அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களான செல்போன் எண்களை பெறமுடிந்தது எப்படி.? அதை எப்படி அவர்கள் பயன்படுத்தலாம்? எனவும் கேள்வி எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி என்பதால் அமைதி காக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை மார்ச் 26 ஆம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை மார்ச் 26 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.