தமிழகம்

சூடாக இருந்த சென்னையை குளிரவைக்க கொட்டித்தீர்த்த மழை! மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்!

Summary:

Heavy Rain in chennai

தென்மேற்குப் பருவமழை காரணத்தினால் தமிழகம் முழுவதும் பரவலாக அதிக மழை பெய்தது, ஆனால் சென்னையில் ஏமாற்றம் அளித்துள்ளது. சராசரியை விட குறைவான அளவே மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்தநிலையில் மாலை 3 மணியில் இருந்து சென்னையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. மேலும் அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் குளிர்ச்சியில் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement