அடுத்த 6 மணி நேரம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைHeavy rain in Chennai and 4 districts in next 6 hours

அடுத்த 6 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை முதல் வடதமிழகம் வரை நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திர கடலோர பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain update

மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல் செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கன மழையும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.