மப்டியில் வந்தது போலீஸ் இல்லை சார்!!, போலீஸ் ஸ்டேஷனில் கதறிய இளைஞரால் பரபரப்பு..!

மப்டியில் வந்தது போலீஸ் இல்லை சார்!!, போலீஸ் ஸ்டேஷனில் கதறிய இளைஞரால் பரபரப்பு..!


He pretended to be a police officer and snatched the chain in a sophisticated manner

சென்னை, செங்குன்றம் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு பகுதியிலுள்ள காமாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன் (23). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் வந்த மர்ம நபர் ஒருவர் தன்னை ஆவடி காவல் துணை ஆய்வாளர் என்றும், மப்டி யில் இருப்பதாகவும் அறிமுகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கே, நீ ஒரு பெண்ணை கடத்திச் செல்வதற்காக வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் உன்னை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவநாதனிடம், ரூ. 50 ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுவதாக பேரம் பேசியுள்ளார்.

இதனால் பயந்து போன வேதநாதன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது உன்னை கைது செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று மிரட்டியுள்ளார். இதன் பின்னர் அந்த மர்மநபர், வேதநாதனை கைது செய்யாமல் இருக்க அவரது கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை கழற்றி தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில், மர்மநபர் தன்னிடம் காவல்துறை அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சங்கிலியை பறித்து சென்றதை வேதநாதன் அறிந்தார்.  மேலும் இந்த நூதன திருட்டு சம்பவம் குறித்து  ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆவடி குற்றப்பிரிவு காவல்துறையினர் மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.