மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

கோவையில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பாரதி வீதியைச் சேர்ந்த சிவகுமரேசன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்தார். அந்த குடும்பத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி இருந்துள்ளார்.
இந்தநிலையில், சிவகுமரேசன் கடைக்கு வரும் அந்த 9 ஆம் வகுப்பு மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் சிவகுமரேசன் சிறுமியுடன் பழகுவதை அந்த குடும்பத்தினர் தவறாக நினைக்கவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட சிவகுமரேசன், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த சிறுமியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் இதற்கு காரணம் சிவகுமரேசன் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமரேசனை கைது செய்தனர்.