பெரும் சோகம்..மின்கம்பம் விழுந்து மின் ஊழியர் உயிரிழப்பு.!

பெரும் சோகம்..மின்கம்பம் விழுந்து மின் ஊழியர் உயிரிழப்பு.!


Great tragedy..Electrical worker died due to the fall of electric pole.!

மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மின்கம்பம் பழுதானதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் பொருத்தும் பணி அங்கு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் இந்த பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மின்கம்பம் அங்கு பணியில் இருந்த ஊழியர் மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Electrical worker

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்து மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைதொடர்ந்து இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்கம்பம் விழுந்து மின் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.