பெண் குழந்தை பிறந்ததற்காக இப்படியா? பாட்டி செய்த கொடூரம்.. பறிபோன உயிர்.! 



Grandmother Arrested for Allegedly Killing Newborn Granddaughter After Second Girl Child Birth

பச்சிளம் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது செய்யப்பட்டார். 

இரண்டாவது பிரசவம்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், ஒரு குழந்தை இருக்கிறது. இதனிடையே, கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினி, இரண்டாவது பிரசவத்துக்காக தாயின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பவானிக்குச் சென்றுள்ளார். 

இதையும் படிங்க: 2 வயது கைக்குழந்தை பாலியல் வன்கொடுமை.. திமுக நிர்வாகி கைது.. பரபரக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!

குழந்தை மர்ம மரணம்: 

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதி செய்யப்பட்ட பிரியதர்ஷினிக்கு, கடந்த 18ம் தேதி குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த 14 மணிநேரத்திற்கு உள்ளாகவே, திடீரென மர்மமான வகையில் உயிரிழந்தது.

Crime news

அதிகாரிகள் விசாரணை: 

இந்த விஷயம் குறித்து பிரியதர்ஷினி பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும், குழந்தையின் உடலும் பிரேத பரிசோதனைக்காக anupi வைக்கப்பட்டது. அப்போது, குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. 

சோகத்தில் துயரம்: 

விசாரணையில், மகளுக்கு இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததாலும், மருமகன் குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பின்றி இருப்பதாலும் மகள் இரண்டாவதாக பெண் குழந்தை பெற்றெடுத்து சிரமப்படுவார் என கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பிரியதர்சினியின் தாய் தங்கமணியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: 15 வயதில் பிரசவம்.. குழந்தை பிறந்த சில நாட்களில் சிறுமி மரணம்.. காதல் திருமணத்தால் கிருஷ்ணகிரியில் ஷாக்.!