AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
அச்சோ கொடுமை... மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... அரசு பேருந்து நடத்துனர் கைது.!
கிருஷ்ணகிரி அருகே மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியகாமாட்சிபட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தவர் பொன்னுரங்கன்(47). பணியிடை நீக்க காலத்தில் உள்ள இவர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள மனநலன் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து அந்தப் பெண் கூச்சலிடவே அப்பகுதியில் உள்ள மக்கள் நடத்துனரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் பொன்னுரங்கனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பொன்னுரங்கன் நீதிமன்ற உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.