தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
இல்லத்தரசிகளுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை.!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர்.
இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு 1.60 பைசா உயா்ந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயா்ந்து, ரூ.75,200 ஆகவும் விற்கப்படுகிறது.