தமிழகம்

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Summary:

கொரோனா சமயத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும்

கொரோனா சமயத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. 

கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தநிலையில் சமீபத்தில் நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. 

ஆனால் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து ரூ.4,345-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 71.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.71,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement