
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது.
இந்த கொரோனா சமயத்தில் ஒருசவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் நெருங்கி அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் அவ்வப்போது தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு சற்று ஆறுதலையும் கொடுத்தது. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்து வந்தநிலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4628 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சனி கிழமை மாலை இதன் விலை ரூ.4611ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து சவரனுக்கு ரூ.136 விலை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் ஒரு சவரன் ரூ.37024 -க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39896-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 76.20 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.60 விலை உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement