தமிழகம்

ஊரடங்கிலும் தலைவிரித்தாடும் கள்ளச்சாராயம்.. பரிதாபமாக பலியான 11 ஆடுகள்!

Summary:

Goats died after having kalla sarayam

கிருஷ்ணகிரியில் விடிய விடிய காய்ச்சி அப்படியே விட்டுச்சென்ற சாராயத்தை தெரியாமல் குடித்ததால் 11 ஆடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  இதனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள சாராயத்தை ஒரு சிலர் காய்ச்சி விற்பனை செய்ய துவங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உள்ள ஒருசில கிராமங்களில் கள்ளச்சாராயம் இரவு பகலாக காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதாம். அவ்வாறு மலைப்பகுதியில் காய்ச்சிய கள்ளச்சாராயத்தை ஒரு சிலர் மூடாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலேரிகொட்டாய் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 11 ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது சாராயம் காய்ச்சிய இடத்தில் மீதமிருந்த கள்ள சாராயத்தை தெரியாமல் குடித்துள்ள 11 ஆடுகளும் இறந்துள்ளன.

ஆடுகள் இறந்து கிடந்த இடத்தில் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள், மரப்பட்டை, உரம் ஆகியவை கிடந்துள்ளன. இதனால் ஆடுகள் நிச்சயம் கள்ளசாராயத்தால் தான் இறந்திருக்கும் என அந்த ஊரை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement