இன்னும் 8 நாட்களில் திருமணம்! இளம் பெண்ணுக்கு எமனாக வந்த செல்போன் அழைப்பு.

இன்னும் 8 நாட்களில் திருமணம்! இளம் பெண்ணுக்கு எமனாக வந்த செல்போன் அழைப்பு.


Girl dead while crossing railway track in vilupuram

விழுப்புரம் மாவட்டம் நற்குணம் எனும் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி.  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் வழக்கம்போல் தனது பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பிய ஜான்சிராணி சென்னை-திருச்சி ரயில் செல்லும் பாதையை செல்போனில் பேசிக் கொண்ட கடக்க முயன்றுள்ளார்.

accident

செல்போன் பேச்சில் தீவிரமாக இருந்த ஜான்சி ராணி ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அதிவேக ரயில் ஒன்று ஜான்சி ராணியின் மீது மோதியதில் ஜான்சிராணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இன்னும் 8 நாட்களில் திருமணம் உள்ள நிலையில் ஜான்சி ராணியின் இந்த திடீர் மரணம் அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.