விடுதியில் தங்கி இருப்பதாக கூறி காதலனுடன் இளம்பெண் செய்த காரியம்!! பேஸ்புக்கால் நேர்ந்த விபரீதம்!!girl-commit-suicide-for-problem-of-lover

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்துமதி. இவர் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் இந்துமதிக்கு பேஸ்புக் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக் மூலமே இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என இந்துமதியிடம் கூறியுள்ளார். 

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சதீஷ்குமார் மற்றும் இந்துமதி இருவரும் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் நான் விடுதியில் தங்கி இருப்பதாக தனது வீட்டில் கூறிவிட்டு இந்துமதி சதீஷ்குமாருடன் ஒரத்தநாட்டில் தனியாக வீடு எடுத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் அங்கிருந்து கல்லூரிக்கும் சென்று வந்துள்ளார்.

Facebook

இந்நிலையில் சதீஷ்குமார் ஒரு எலக்ட்ரீசியன் எனவும், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் இந்துமதிக்கு தெரியவந்துள்ளது. அதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு  வந்துள்ளது.

 இந்நிலையில் நேற்று வீட்டில் எந்த நடமாற்றமும் இல்லாதநிலையில் இந்துமதியின் வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு இந்துமதி தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்துள்ளார். மேலும் அருகில் போதைமயக்கத்தில் சதீஷ் கிடந்துள்ளார். 

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இந்துமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை கேட்டதும் அவர்கள் இந்துமதியின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.