தமிழகம்

வீடியோ தொகுப்பு: நாகை, தஞ்சை மற்றும் புதுகையில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா!

Summary:

gaja video updates

கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது என்றும் இன்னும் அரை மணி நேரத்தில் கண்ணின் முழுப் பகுதியும் கரையைக் கடந்து விடும் என்றும் கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும் என்றும் பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு ஒரு மணிக்கு துவங்கிய கஜா புயல் தொடர்ந்து விடியற்காலை 5 மணி வரை தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிக பலத்த காற்றுடன் வீசியுள்ளது. இதனால் பலரின் வீட்டுக்கூரைகள் காற்றில் பறந்தும், மரங்கள் முறிந்தும் கிடக்கின்றன.

சுமார் அரை மணி நேரம் அமைதியாக இருந்த கஜா புயல் மீண்டும் ஆறு மணியிலிருந்து பலத்த காற்றுடன் வீசத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.Advertisement