கஜா: "சுழன்றடித்த காற்றில் முறிந்து போன மரங்கள்" - நள்ளிரவில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா!

கஜா: "சுழன்றடித்த காற்றில் முறிந்து போன மரங்கள்" - நள்ளிரவில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா!



gaja started affecting

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே நள்ளிரவு முதல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று விடுமுறையாகும். நாகை, கடலூர் மாவட்டங்களில் இன்றும் விடுமுறை தொடரும்.

தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் காற்று பலமாக வீசத் துவங்கியுள்ளது. வீடுகளின் மேற்கூரைகள் பரந்து செல்லும் அளவிற்கு காற்று பலமாக வீசியது. மேலும் மரங்களும் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தும் பாதியில் முறிந்தும் காற்றில் பறந்து சென்றுள்ளது. இதனைக் கண்டு மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.





கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது என்றும் இன்னும் அரை மணி நேரத்தில் கண்ணின் முழுப் பகுதியும் கரையைக் கடந்து விடும் என்றும் கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும் என்றும் பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.