அரசியல் தமிழகம்

காஜா: தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட காட்சிகள் கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Summary:

gaja relief fund from diravida katchikal

கஜா புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இதனால், வீடுகள், கால்நடைகள், விளைபொருள்களை இழந்து மக்கள் உணவு, தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். அரசும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகளை சரி செய்து வருகிறது. இதனால் மெள்ள மெள்ள மீண்டு வருகின்றனர் டெல்டா மாவட்ட மக்கள்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி திமுக பொருளாளர் திரு. துரைமுருகன் அவர்கள் திமுக அறக்கட்டளையின் சார்பில் 'கஜா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று கஜாபுயல் நிவாரண நிதிக்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம், "அஇஅதிமுக சார்பில் 1 கோடி" ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இந்த இரண்டு திராவிட கட்சிகளால் 1 கோடி தான் நிவாரண நிதியாக வழங்க முடியுமா என மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.


Advertisement