தமிழகம்

கஜா புயல் எதிரொலி: 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.!

Summary:

gaja cyclone - tamilnadu school holiday

கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.

கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் இன்று கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தின் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Image result for gaja cyclone

70 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் தற்போது வேகம் குறைந்து 10கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றது. இந்த புயல் சென்னை கிழக்கே 490 கி.மீ தெலைவிலும். நாகைக்கு 580 கி.மீ தெலைவிலும் உள்ளது. இன்று தீவிர புயலாக மாறக்கூடும் என்றும், மாலை புயல் கரையை கடக்கலாம் என்றும், கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வங்க கடலில் இருந்து மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே இன்று கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதனால் இன்று வட தமிழகம் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 


Advertisement