தமிழகம் Covid-19

தமிழகத்தில் விரைவில் முழு ஊரடங்கு?? தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி அவசர வழக்கு!!

Summary:

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்ப

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை பயங்கர வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் உடனே முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், தமிழகத்தில் உடனே முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.


Advertisement