தமிழகம்

அடேங்கப்பா சிறப்பு .. திருமண ஜோடிக்கு முழு பாட்டிலில் வழங்கப்பட்ட கலக்கலான பரிசு ? இதையே இனி நீங்களும் செய்யலாமே ..

Summary:

அடேங்கப்பா சிறப்பு .. திருமண ஜோடிக்கு முழு பாட்டிலில் வழங்கப்பட்ட கலக்கலான பரிசு ? என்னனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க..

திருமணத்தின் போது மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது, இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரபு மற்றும் திவ்யா ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது.

அவர்களுக்கு  சக ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து  ஒரு பாட்டிலில் 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளனர்.இந்த வித்தியாச பரிசு மணமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பெட்ரோல் விலை உயர்வால் மணமகன் பாதிக்கப்படாமல் இருக்க இந்த பரிசு அவருக்கு உதவும் என சக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் திருமண வீட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .


 


Advertisement