
கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இலவச பெட்ரோல் வழங்கப்படும் சம்பவம் வைரலாகிவ
கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இலவச பெட்ரோல் வழங்கப்படும் சம்பவம் வைரலாகிவருகிறது.
கரூர் மாவட்டம், வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் நிறுவனம் ஒன்று, தங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வருபவர்கள் 10 திருக்குறள் சொன்னால் அரைலிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும், அதுவே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பையிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும் எனவும் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தங்கள் வண்டிக்கு பெட்ரோல் போட வருபவர்கள், வீட்டில் உள்ள பள்ளி மாணவர்களை அழைத்துவந்து இலவச பெட்ரோலை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெட்ரோல் பங்க் நிர்வாகம், எங்களுக்கு நீண்ட நாட்களாகவே இந்த திருக்குறள் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களிடம் தமிழ் பேசுவது, வாசிப்பது போன்றவற்றில் இருக்கும் ஆர்வம் குறைந்து வருவதாலும், மக்களுக்கு திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement