தமிழகம்

திருநெல்வேலியில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா.. வெளியான அதிர்ச்சி கரணம்!

Summary:

fourty corono cases at tirunelveli in single day

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

62 கொரோனா பாதிப்புகளை கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டும் நாங்குநேரி வட்டாரத்தில் 32 பேர், பாப்பாக்குடியில் 3 பேர், ராதாபுரத்தில் ஒருவர், வள்ளியூரி்ல் 2 பேர், மானூரில் ஒருவர், திருநெல்வேலி மாநகரில் ஒருவர் என்று மொத்தம் 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி திருநெல்வேலியில் பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

42 of 57 positive cases are in Tirunelveli and Namakkal- The New ...

இந்த திடீர் எண்ணிக்கை உயர்விற்கு காரணம் மஹாராஷ்டிராவில் தங்கி பணியாற்றிய பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் தான் என கண்டறியப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாவதால் திருநெல்வேலியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றனர். இருப்பினும் சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அவர்கள் ஊருக்குள் சென்று விடுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement