தமிழகம்

மதுபோதையில் காவலரை தாக்கும் நபர்கள்! மிகவும் பொறுமையாய் இருந்த காவலர்! வைரல் வீடியோ!

Summary:

four men fight with single police


பாண்டிபஜார் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் கார்த்திகேயன் கடந்த 13ஆம் தேதி இரவு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த நான்கு பேர் திருநங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்தனர் அதனைப்பார்த்த கார்த்திகேயன், அவர்களை எச்சரித்து போகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த 4 பேரும் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் காவலரை தாக்கியுள்ளனர். காவலர் எவ்வளவோ பொறுமையாக பேசியும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், காவலர்களை தாக்கிய சுலைமான், அக்தர், முகமது செளக் அலி,முகமது ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement