யாரு இடத்துல வந்து யாருகிட்ட சீன போடுற... வனத்துறை அதிகாரிகளை ஓடவிட்ட யானை.!

யாரு இடத்துல வந்து யாருகிட்ட சீன போடுற... வனத்துறை அதிகாரிகளை ஓடவிட்ட யானை.!


forrest officers freared and run for elephant

நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 9 காட்டு யானைகளை துரத்த முயன்ற வனத் துறையினரை யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்கிருந்த  அனைவரும் அலறியடித்து ஓடினா்.
 
நீலகிரி மாவட்டம், குன்னூா்  கிளன்டேல் தனியாா் எஸ்டேட் பகுதியில்  அலுவலா்கள் குடியிருப்புப் பகுதிக்குள் கடந்த வியாழக்கிழமை புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மலா்த் தொட்டிகள், வாழை  மரங்களை சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா்  தகரங்களைத்  தட்டியும், கூச்சலிட்டும்  யானைகளை  அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இந்நிலையில்,  இந்த யானை கூட்டம் மீண்டும்   ரன்னிமேடு ரயில் நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உலவி வருவதாக  வனத் துறையினருக்குத்  தகவல் கிடைத்தது.  இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட  வனத் துறையினா் யானைகளை துரத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனா்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு யானை ஒன்று திடீரென திரும்பி வனத் துறையினரைத் துரத்தத் துவங்கியது. சுதாரித்துக் கொண்ட வனத் துறையினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள்  அங்கிருந்து அலறியடித்து ஓடினர். பின்னா், யானை கூட்டம் ரன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு திரும்பிச் சென்றனா்.