அரசியல் தமிழகம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு.!

Summary:

former ips Annamalai appointed as BJP vice president of tamilnadu

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. பொறியியல் படிப்பை முடித்த  இவர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே 2010-ம் ஆண்டு, ஐ.பி.எஸ்ஸாகத் தேர்வானார்.

முதன் முதலில் கர்நாடகம் கார்தலாவில் ஏ.எஸ்.பியாக பணியில் அமர்த்தப்பட்டார். ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி பின்னர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்து சமூக அமைப்பு, இயற்கை விவசாயம், நாட்டு மாடுகளைக் காத்தல் என செயல்பட்டு வந்தவர் தான் அண்ணாமலை.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தமிழக மாநில பாஜக துணை தலைவராக  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 


Advertisement