மக்களே தயாரா... சிங்கார சென்னையில் ஆகஸ்ட் 12 -14 வரை கோலாகல உணவுத் திருவிழா... எங்கு தெரியுமா.?

மக்களே தயாரா... சிங்கார சென்னையில் ஆகஸ்ட் 12 -14 வரை கோலாகல உணவுத் திருவிழா... எங்கு தெரியுமா.?


food-court-in-chennai-coming-august-12-to-14

தமிழ்நாட்டின் தலைநகரான சிங்காரச் சென்னையில் ஆகஸ்ட்12,13,14 ஆகிய மூன்று தினங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா நடைபெற உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022 என்ற பெயரில் மூன்று தினங்கள் உணவு திருவிழா நடைபெற உள்ளது.

இந்த உணவு திருவிழாவில் திரை கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உணவு திருவிழா நடைபெறுகிறது.  சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள் , பாரம்பரிய உணவு வகைகள் , உணவு சார்ந்த போட்டிகள் , கலைநிகழ்ச்சிகள் , 1200 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது என்பதையும் கற்றுகொடுக்கின்றனர்.

Food court

மேலும் எந்த  உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்,  எப்படிப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது,  உணவு வீணாவதை எப்படி தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்த நிகழ்வாக இந்த உணர்வு திருவிழா நடைபெற உள்ளது.  உணவு திருவிழாவின் இறுதி நாளான 14-ஆம் தேதி உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் காலை 7 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.