தமிழகம் இந்தியா

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம்!! தரையிறங்கும்பொழுது நூலிழையில் உயிர்தப்பிய 143 பேர்!

Summary:

flight wheel not working in airport

சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு முனையத்துக்கு டெல்லியில் இருந்து 143 பேருடன் வந்த விமானம், ஓடுபாதையில் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சித்தபோது விமானத்தின் சக்கரங்கள் இயங்கவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரை இறக்காமல் வானத்தில் சிறிதுநேரம் வட்டமடித்தார். பின்னர் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

airport run way க்கான பட முடிவு

விமானநிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மருத்துவ குழுவினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். அணைத்து ஏற்பாடுகளும் செய்தபிறகு விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. 

பதட்டமான சூழ்நிலையில் விமானத்தை தரையிறக்கும்போது, இயங்காமல் இருந்த சக்கரங்கள் திடீரென இயங்கத் தொடங்கியது. இதனால் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Advertisement