உயிர் மீனை விழுங்குவதுபோல் செல்பி..! மீன் நழுவி தொண்டையில் சிக்கி உயிரிழந்த வாலிபர்.!

உயிர் மீனை விழுங்குவதுபோல் செல்பி..! மீன் நழுவி தொண்டையில் சிக்கி உயிரிழந்த வாலிபர்.!


fish-fell-in-throat-and-young-boy-died-near-vilupuram

தூண்டிலில் சிக்கிய மீனை உயிருடன் விழுங்குவதுபோல் செல்பி எடுக்க முயற்சித்த நபர் தொண்டையில் மீன் சிக்கி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்து மேல் அருங்குணம் கீரிமலை தென்புற வீதியை சோ்ந்தவா் அரிகண்டன். 17 வயதாகும் அரிக்கண்டன் வெல்டிங் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலையே இருந்த அரிக்கண்டன் அருகில் இருந்த ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

Mysterious

தூண்டிலை வைத்து அரிக்கண்ட மீன் பிடித்தபோது அரிகண்டனின் தூண்டிலில் மீன் ஓன்று சிக்கியுள்ளது. தூண்டிலில் சிக்கிய மீனை பிடித்து, அதை விழுங்குவதுபோல் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார் அரிக்கண்டன். இந்த முயற்சியில் உயிருடன் இருந்த மீன் துள்ளி குதித்து அரிகண்டனின் வாயில் விழுந்து தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.

மீனை எடுக்க முயற்சி செய்தும் முடியாததால் அரிக்கண்டன் அலறி துடித்துள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்க்க, அதிக மூச்சுத் திணறல் காரணமாக அரிகண்டன் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்னனர்.

மீனை வைத்து செல்பி எடுக்க முயன்றவர் அந்த மீனால் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.