தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி! வெளிநாட்டில் இருந்து அவர் வராத நிலையில் அவருக்கு கொரோனா வந்தது எப்படி?

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி! வெளிநாட்டில் இருந்து அவர் வராத நிலையில் அவருக்கு கொரோனா வந்தது எப்படி?



First death for corona

கொரோனா வைரஸால் தமிழகத்தில் முதல் பலி எண்ணிக்கை தொடங்கியது. மதுரையில் சிகிச்சையில் இருந்த 54 வயது ஆண் பலியானதாக தமிழக சுகதர்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திவரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாதவர். இருப்பினும் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது பீதியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு  நுரையீரல் நோய், சர்க்கரை வியாதி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால், நேற்று இரவு முதல் நிலைமை கவலைக்கிடமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகம் கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது.

தாய்லாந்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்துள்ள நபர்களுடன் மதுரை நபர் பழகியுள்ளதை விசாரணையில் கண்டுபிடித்துவிட்டோம், அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களையும் தனிமைப்படுத்திவிட்டோம் எனவே எந்ததொடர்பும் இல்லாத ஒருவருக்கு திடீரென வைரஸ் தொற்று ஏற்பட்டது என பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.