தமிழகம் சினிமா

நடிகர் சங்க அலுவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! சென்னையில் பரபரப்பு.!

Summary:

நடிகர் சங்க அலுவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, வழக்குகள் தொடரப்பட்டன. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement