பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு..!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு..!


Fierce clash between two parties during birthday celebrations

திருவள்ளூர் மாவட்டம், புதூர் பகுதியை சோ்ந்தவா் மோகன்(21). இவரது நண்பா்கள் திருவள்ளூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பெரியார் நகர் பகுதியை சோ்ந்த பிரகாஷ், பிரசாந்த் மற்றும் புஷ்பராஜ். இவர்கள் அனைவரும் இணைந்து அவா்களது நண்பா் அஜீஸ் என்பவரது பிறந்த நாள் கேக் வெட்ட அங்குள்ள ஹோட்டல் முன்பு கடந்த திங்கட்கிழமை இரவு காத்திருந்தனா்.

அப்போது அந்த வழியாக ஜே.என்.ரோடு, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (23), யோகேஷ் ஆகிய இருவரும் குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பிறந்த நாள் கேக் வெட்டுவதற்காக நண்பா்களுடன் காத்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து கூச்சலிட்டதோடு, தகாத வார்த்தைகளை பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது மோகன், பிரகாஷ், பிரசாந்த் ஆகியோர் சந்தோஷை தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் சந்தோஷ் தனது தம்பி ஆகாஷுக்கு தகவல் தெரிவித்துள்ள்ளார். தனது நண்பா்களான தேவா, விஜி, ஆபேல், எடப்பாளையம் சரவணா ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்த ஆகாஷ், கேக் வெட்ட காத்திருந்த நண்பர்களை சராமரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்த், மோகன், பிரகாஷ் ஆகியோரை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலி 3 பேரும் பலத்த காயம் அடைந்தனா். பின்னர் அங்கு பொதுமக்கள் வருவதைப் பார்த்து அங்கிருந்து தப்பினா். இதனையடுத்து, பலத்த காயம் அடைந்த 3 பேரையும்  திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக அழைத்து சென்றனா்.

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பைச் சோ்ந்தோரும் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.