இந்த மனசு தான் சார் கடவுள்.! இறந்த நபரின் உடலை தூக்க யாரும் முன்வரவில்லை... பெண் காவலர் செய்த நெகிழ்ச்சி செயல்.!



female chief constable who helped carry the body of the deceased

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடப்பதாக கடந்த 7-ம்தேதி காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு வந்த பெரியமேடு ரோந்து வாகன தலைமை காவலர் லீலாஸ்ரீ, ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தார். மேலும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவரை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரியவந்தது.

இந்தநிலையில், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உறவுகள் டிரஸ்ட் என்கிற தொண்டு நிறுவன  ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து இறந்த நபரின் உடலை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு கூட பொதுமக்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் தலைமை காவலர் லீலாஸ்ரீ மற்றும் காவலர் ஒருவர் இறந்தவரின் உடலை தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுதது காவலர் லீலாஸ்ரீ, உயிரிழந்த ரமேஷின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது பரகத்துல்லா பெண்கள் தினத்தன்று லீலாஸ்ரீயை அழைத்து பாராட்டி பரிசளித்தார். 

மேலும், இறந்த நபரின் சடலத்தை தூக்கி வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெரியமேடு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் லீலாஶ்ரீ அவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.