
Fault in cm flight
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி செல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இன்று கன்னியாகுமரி வர இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வரும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
எனவே இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் விமானத்தில் புறப்பட்டார். தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. கோளாறு காரணமாக முதல்வர் உடனடியாக சென்னைக்கு திரும்பினார்.
சென்னையில் இருந்து புதிய விமானம் மூலம் முதல்வர் மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement