மகளுக்குப் பிடித்த பாடலை இறுதிச்சடங்கில் பாடிய தந்தை: நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்.

Father sung a song at daughter death


Father sung a song at daughter death

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தாமஸ். இவரது மகள் மெர்சி என்பவருக்கும், அப்பு என்ற வாலிபருக்கு திருமணம் செய்வதை நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் செல்பி எடுப்பதற்காக அவரை கூட்டிக்கொண்டு வீட்டின் அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் மெர்சி. புகைப்படம் எடுக்கையில் மெர்ஸியின் கால் தவறி இருவரும் தண்ணீருக்குள் விழுந்துள்ளனர்.

selfie

இதனை அடுத்து தண்ணீரில் மூழ்கி மெர்சி உயிர் இழந்ததை அடுத்து அப்புவை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்னனர். இந்நிலையில் தனது இறந்த மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை தாமஸ் மகளின் இறுதி சடங்கில் மகளுக்கு பிடித்த பாடலை கதறியபடி பாட, அவருடன் இருந்தவர்களும் அந்த பாடலை இணைந்து பாடினர்.

பின்னர் கிறிஸ்தவ முறைப்படி மெர்ஸியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகளின் இறுதி சடங்கில் அவருக்கு பிடித்த பாடலை தந்தை பாடியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.