தமிழகம்

பிள்ளைகள் கண் முன்னே கொடூரமாக தற்கொலை செய்துகொண்ட தந்தை!! பதறவைத்த சம்பவம்!!

Summary:

father suicide front of his child

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ்.  இவருக்கு கீதா என்ற மனைவியும் கிரிஜா மற்றும் ஆரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரு தினங்களுக்குமுன்பு இவர் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குடுபத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் ரமேஷ் அவரது கிரமத்தில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக செல்போனில்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அவரின் மனைவி மற்றும்குழந்தைகள் செல்போனில் எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் அவரை கீழே இறங்கிவருமாறு கூறியுள்ளனர்.

பல மணிநேரம் மின்கோபுரத்தின் மேலே நின்று பேச்சுவார்த்தைநடைபெற்றது. ஆனாலும் இந்த போராட்டத்தில், காவல்துறையினரும், மீடியாக்களும் எவ்வளவோ போராடியது. எதையும் காதில் வாங்காத ரமேஷ் கீழே குதித்து உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியானார்.


 


Advertisement