தமிழகம்

2 பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.! துயரச்சம்பவம்..!!

Summary:

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை.

சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கடும் சோகத்தில் இருந்த ஏசி மெக்கானிக் ஒருவர், தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் வசித்து வந்தவர் வினோத். 32 வயது நிரம்பிய இவர் ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்துள்ளார். வினோத்திற்கு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு இரண்டு ஆன் 2 குழந்தைகள் இருந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வினோத்தின் மனைவி கவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு, மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பணிக்கு செல்லாமல் இருந்துவந்துள்ளார். 

இந்தநிலையில் கடும் மனவேதனையில் இருந்த வினோத் நேற்று நள்ளிரவு அவரது இரண்டு பச்சிளம் குழந்தைகளை கொன்றுவிட்டு, அவரும் மனைவியின் புடவையால் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வினோத் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement