தள்ளாடும் வயதுள்ள தந்தைக்கு தூணாக மகள்.. வைரலாகும் தந்தை - மகள் பாசப்பிணைப்பு வீடியோ.!



Father Daughter Family Relationship Video Goes Viral Social Media

பெண் குழந்தைகள் பெரும்பாலும் அப்பா செல்லமாகத்தான் இருப்பார்கள். தாயிடம் மகள் காரியத்தை சாதிக்கிறாளோ இல்லையோ, தந்தையிடம் தனது ஒற்றை சிரிப்பால் அனைத்தும் சாதித்திடுவாள். சிறு குழந்தையாக இருக்கும் போது, தந்தையின் தோளில் அமர்ந்து உலகை அறிய தொடங்குபவள், தன்னால் பிறக்கும் குழந்தைக்கு தாயானாலும் என்றுமே தந்தைக்கு அதே மகள் தான். 

இன்றுள்ள காலங்களில் குடும்ப உறவுகள் என்பது பல்வேறு காரணத்தால் வெகுவாக சிதைக்கப்பட்டு வந்தாலும், பாசம் என்ற ஒற்றை உணர்வில் அனைத்தும் அமைதியாகிறது. கோவில் திருவிழாக்களில் சிறுபிள்ளையாக இருக்கும் போது, தந்தையின் தோள்பட்டையில் அமர்ந்து தெய்வத்தை கண்டு வணங்கிய ஒரு சகோதரி, இன்று தனது தந்தைக்கு ஆற்றிய நெகிழ்ச்சி நிகழ்வு வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோ எப்போது? யாரால்? பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. பெண்ணொருவர் தனது தந்தை தள்ளாடும் வயதில் இருக்கும் நிலையில், அவரை தனது கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு திருவிழாவை காண வைக்கிறார். இதைவிட ஒரு சராசரி தந்தைக்கு வேறென்ன வேண்டும்?.