தமிழகம்

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை!

Summary:

father abused his daughter

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொரோனா சமயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே 45 வயது கூலித்தொழிலாளிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது மூத்த மகள் ஞாபகமறதி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கூலித்தொழிலாளி, தன் மகள் என்றும் பார்க்காமல், அவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் 10ம் வகுப்பு  படிக்கும் அந்த மாணவி கர்ப்பமானார். இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கொடூர நபரை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.


Advertisement