விவசாயி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. எஸ்.ஐ உட்பட 5 பேர் என குடும்பமே கைது.!

விவசாயி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. எஸ்.ஐ உட்பட 5 பேர் என குடும்பமே கைது.!



farmer-kill-by-police-officer-and-his-family

முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவர், படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையாபுரம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சசிகுமார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த காவல்துறை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகு பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ அழகு பாண்டியனின் நிலத்தில் உள்ள மரக்கன்றுகளை சேதப்படுத்தியதற்காக, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சசிகுமார் உட்பட 9 பேர் மீது வழக்குபதியப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று சசிக்குமார் தன்னுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகளை நைனார்குளம் சந்தைக்கு விற்பதற்காக எடுத்து சென்ற போது, எஸ்.எஸ்.ஐ அழகு பாண்டியனின் மகன் பாலமுருகன், சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.Thirunelveliஇதனால் படுகாயமடைந்த சசிக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், இதற்கு காரணம் எஸ்.எஸ்.ஐ அழகுபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் என தெரியவந்துள்ளது.

எனவே நெல்லை மாநகர காவல் ஆணையர், எஸ்.எஸ்.ஐ அழகுபாண்டியனை சஸ்பென்ட் செய்ய  உத்தரவிட்டுள்ளார். மேலும், சசிகுமார் கொலை வழக்கில் அழகுபாண்டியன், அவரது மனைவி ராஜம்மாள் மற்றும் அவரது மகன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.