தமிழகம்

தாறுமாராக சென்ற மதுபான ஆலைக்கு சொந்தமான வேன்.! தூக்கி வீசப்பட்ட விவசாயி.! ஆலங்குடி அருகே சோக சம்பவம்.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள உள்ள கணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவே

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள உள்ள கணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்ற விவசாயி நேற்று மாலை வெட்டன் விடுதி கடைவீதிக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த  தனியார் மதுபான ஆலைக்கு சொந்தமான வேன் அவர் மீது மோதியது. வேன் மோதிய அடுத்த நிமிடமே இருச்சக்கார வாகனத்துடன் தூக்கி வீசப்பட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த தங்கவேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, இந்த விபத்தை ஏற்படுத்திய செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். தனியார் மதுபான ஆலைக்கு சொந்தமான வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement