ஒரு நாளைக்கு இரண்டு பெண்கள்! மொத்தம் 4000 பெண்கள்! பேன்சி ஸ்டோர் உரிமையாளர் செய்த கொடூர செயல்!

ஒரு நாளைக்கு இரண்டு பெண்கள்! மொத்தம் 4000 பெண்கள்! பேன்சி ஸ்டோர் உரிமையாளர் செய்த கொடூர செயல்!



Fancy store owner aborted for 4000 girls

கணவனுடன் கூட்டு சேர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 4000 பெண்களுக்குமேல் சட்ட விரோதமாக கறுகளைப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அவலுர்பேட்டை சாலையில் கவிதா என்பவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். இவரது கவர் அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கவிதாவின் பேன்சி ஸ்டோரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. இதனை அடுத்து அங்கு விசாரணை நடத்திய போலீசார் சட்ட விரோதமாக அங்கு கருக்கலைப்பு நடப்பதை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கவிதா மற்றும் அவரது கணவர் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Crime

போலீசார் விசாரணையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள் தங்களது கருவை கலைப்பதற்காக கவிதாவின் பேன்சி ஸ்டோரை தேடி வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக, இந்த தொழிலை கணவன், மனைவியும் கூட்டு சேர்ந்து மர்மமாக செய்து வந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் காதலில் விழுந்து ஏமாந்த பெண்கள் அதிகம் இங்கு கருக்கலைப்புக்கு வந்துள்ளனர். மேலும், ஒருநாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு பெண்கள் கருகலைப்பதற்காக இங்கு வருவதாகவும் கவிதா கூறியுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனே கருவை கலைத்துவிடுவோம். மிகவும் ஏழ்மையில் இருக்கும் பெண்கள் என்றால் சற்று ரேட்டை குறைத்துக் கொள்வோம் என்றார்.