வங்கியில் 4 கிலோ போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி! ஏலத்தில் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்!
வங்கியில் 4 கிலோ போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி! ஏலத்தில் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்!

சேலத்தில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் உள்பட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
சேலம் மாவட்டம் நால்ரோடு அருகே இயங்கிவரும் வரும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் கடந்த 22-ஆம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் சிலர் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கிளை மேலாளர் தலைமை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். இந்தநிலையில் வங்கி அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்ததில், 24 பேரின் பெயரில் 4 கிலோ போலி நகைகளை வைத்து 94 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உள்பட 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.